நாமக்கல் ஆஞ்சநேயர் உண்டியலில் ரூ.37 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 10:02
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் 37 லட்சத்து 15 ஆயிரத்து 228 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது, கணக்கிடப்பட்டது. நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை கோவில் உதவி கமிஷனர் சபர்மதி மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது. காணிக்கை கணக்கிடும் பணியில் வங்கி, கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். காணிக்கை தொகையாக மொத்தம் 37 லட்சத்து 15 ஆயிரத்து 228 ரூபாயும், தங்கம் 6 கிராம் 100 மில்லி கிராம் மற்றும் வெள்ளி 94 கிராம் காணிக்கையாக செலுத்தியது கணக்கிடப்பட்டது. கோவில் தக்கார் கிருஷ்ணன், நகை மதிப்பீட்டாளர் விஜயரங்கதுரை உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.