காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2013 10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை, காமாட்சியம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் விஸ்வரூப தரிசனத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் இரவு விடையாற்றி உற்சவம் துவங்கியது.இதையொட்டி, காமாட்சியம்மன் நகை அலங்காரத்துடன், ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடையாற்றி உற்சவம் ஏழு நாட்கள் நடைபெறும்.