பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
புதுச்சேரி: தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு, சாரம் மாசிமக வரவேற்புக்குழு சார்பில், மகா கணபதி ஹோமம், தச கலசம் மற்றும் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.புதுச்சேரி கடற்கரையில், கடந்த 25ம் தேதி நடந்த மாசிமக தீர்த்தவாரி திருவிழாவிற்கு, தீவனூர் பொய்யாமொழி விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து, சாரம் நடுத் தெருவில் உள்ள சித்திபுத்தி விஜயகணபதி கோவிலில் பொய்யாமொழி விநாயகர் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாரம் மாசிமக வரவேற்புக் குழு சார்பில், பொய்யாமொழி விநாயகருக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.காலை 9.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, தசகலச ஆவாஹனம், 108 சங்கு ஆவாஹனம், 96 வகை மூலிகை ஷன்னவதி ஹோமமும், மகா பூர்ணாஹூதி தீபாராதனை, கலசப் புறப்பாடு முடிந்து, பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகருக்கு திவ்ய அலங்கார மகா தீபாராதனை செய்து, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொய்யாமொழி விநாயகர், இன்று (1ம் தேதி) காலை 9.00 மணிக்கு, தீவனூர் புறப்பட்டுச் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாசி மகம் வரவேற்புக்குழு தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.