பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
புதுக்கடை: குமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாலை முதல் துவங்குகிறது. குமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இனிய பகுதி. ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வளமான நிலப்பகுதிகளும் அமைந்த வளமான பூமி. இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த குமரி மாவட்டத்தில் மட்டுமே “சிவாலய ஓட்டம்’ என்னும் மகாசிவராத்திரி விழா நடந்து வருவது மிகவும் சிறப்பு மிக்கது. இந்த சிவாலய ஓட்டமானது சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை, திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்குகிறது. சிவாலய ஓட்டம் குறித்து பக்தர்களிடம் பல்வேறு நம்பக்கைகள் உள்ளன. இதில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் தல புராணத்தோடு தொடர்புடையது. ஒரு சமயம் பரம்மா யாகம் செய்தார். அப்போது, பற்மாவிற்கு திடீரென அகங்காரம் ஏற்பட்டது. அதனால், விஷ்னுவின் தூண்டுதலால் பரம்மாவின் நாவில் வாணிதேவி அமர்ந்து, மந்திர உச்சாடனத்தைப் பரளச் செய்தார். இதனால், யாககுண்டத்தில் இருந்த தீபகேசி வடிவாக கேசன் என்ற அரக்கன் தோன்றி, பரம்மாவிடம் மரணம் இல்லாதிருக்க வரம் பெற்றான். பன்னர், மலையபர்வதத்தில் இருந்த கவுடில்யன் என்னும் அரசனைக் கொன்று, அந்நாட்டை தனதாக்கிக் கொண்டான் கேசன்.
தொடர்ந்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். கேசன் ஆட்சியின் கீழ் மூவுலகமும் வந்தது. அவனது கொடுமையைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு கருட வாகனம் ஏறி கேசனுடன் போரிட்டார். ஆனால், அவனை அழிக்க முடியவில்லை. அப்போது பராசக்தி வழிகாட்டுதலுடன், விஷ்ணு கேசனை வீழ்த்தி ஆதிசேஷனின் அரணுக்குள் அகப்படச் செய்தார். ஆனாலும், கீழே விழுந்த கேசனின் 12 கைகளும் பாம்பணைக்கு வெளியே விழுந்து கிடந்தன. அந்த கைகளால் அகப்படும் மனித உயிர்களைப் படித்து கேசன் வதம் செய்து, பேரழிவுகளை ஏற்படுத்தினான். கேசன் சிவபக்தன் என்பதால் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைப் பரதிஷ்டை செய்தார் விஷ்ணு. இதனால், கேசன் தீமை செய்ய முடியாமல் செயலற்றுப் போனான். இவ்வாறு பரதிஷ்டை செய்யப்பட்ட 12 சிவலிங்கங்களே தற்போது 12 சிவாலயங்கள் என புராணக் கதை கூறுகிறது. இதேப்போன்று சிவாலய ஓட்டத்திற்கு காரணமாக இன்னொரு புரணக்கதையும் கூறப்படுகிறது. சிவ பக்தனான ஒரு அசுரன் சிவனை வேண்டி திருமலையில் (சிவாலயத்தில் முதல் கோயில்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றி, வேண்டிய வரம் தருவதாகக் கூறினார். அந்த அரக்கன் தான் யாருடைய தலையைத் தொட்டாலும் அவன் சாம்பலாகிப் போய்விட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். சிவனும் அந்த வரத்தை அளித்தார். வரம் உண்மையிலேயே தனக்குத் தரப்பட்டதா? அது பலிக்கிறதா? என்று சோதனை செய்ய முயன்றான் அரக்கன். அதை அறிய சிவனின் தலையைத் தொட முயற்சித்தான். ஆனால், சிவன் அங்கிருந்து “கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்த வண்ணம், ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். இறுதியில், நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை, நாட்டியம் ஆடி, அவன் கையால் அவன் தலையைத் தொடச்செய்து அழிக்கிறார் விஷ்ணு.
இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவனுக்குக் கோயில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு படுத்தும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோல் மற்றுமொரு கதையும் உள்ளது. ஒருமுறை பகவான் கிருஷ்ணன் ராஜகுரு யாகத்திற்காக புருஷாமிருகத்தின் (வியாக்பாத மகரிஷி) பால் கொண்டு வர, பஞ்சபாண்டவர்களில் ஒருவராகிய பீமனிடம் வேண்டினார். பீமனும் பகனானின் கோரிக்கையினை ஏற்றார். பகவான் 12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுத்து, புருஷாமிருகம் சிறந்த சிவபக்தி உடையது. அது திருமாலின் நாமத்தைக் கேட்டால் சினம் கொள்ளும் என்றும் கூறி எச்சரித்தார். அந்த மிருகத்தால் ஆபத்து வரும் தருவாயில், ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு ஓட வேண்டும், என்று கூறி பகவான் கிருஷ்ணன் பீமனை வழியனுப்ப வைக்கிறார். பீமனும், பகவானிடம் விடைபெற்று புருஷாமிருகத்தைத் தேடி வந்தார். திருமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் புருஷாமிருகம் தவம் இருப்பதைக் காண்கிறார். சிவனை நோக்கி கடும் தவம் இருக்கும் புருஷாமிருகத்திடம் “கோபாலா, கோவிந்தா’ என்று திருமாலின் நாமத்தை பீமன் கூற, சினமடைந்த புருஷாமிருகம் பீமனை விரட்டுகிறது. அப்போது பகவான் கிருஷ்ணன் கூறியதைப் போல ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு ஓடுகிறார் பீமன். அப்போது, அந்த ருத்திராட்சம் சிவலிங்கமாக உருவாகிறது. உடனே, புருஷாமிருகம் சிவலிங்கத்தைத் தொழுது, பன்னர் பீமனை விரட்டுகிறது. இதுபோன்று, 11 ருத்திராட்சங்களையம் தரையில் போட்டு விட்டு, நிறைவாக நட்டாலம் பகுதியில் ருத்திராட்சம் போடப்படுகிறது. அங்கும் சிவலிங்கம் தோன்றியது. அவ்விடத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாகத் தோன்றி ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தினர். நட்டாலம் ஆலயத்தில் மூலவர் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். இங்கு ஒரே விக்ரகத்தில், ஒரு பாதியில் சிவன் உடுக்கையுடனும், மறுபாதியில் விஷ்ணு சக்ராயுதத்துடனும் காட்சி தருகின்றனர். இந்த நிகழ்ச்சியினை, பக்தர்கள் ஆண்டு தோறும் சிவாலய ஓட்டமாக ஒடுகின்றனர். சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களும் விளவங்கோடு, கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளன. முன்சிறை திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி சிவன் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் என வரிசையாக 12 சிவாலயங்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் இடம் பெறுகின்றன. சிவாலயங்களில் சிவராத்திரிக்கும் முன்தினம் மாலை முதல் பக்தர்கள் “கோபாலா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஓடி தரிசனம் செய்வர். முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து ஒன்பது கி.மீ., தூரத்தில் உள்ள திக்குறிச்சி சிவன் கோயில் இரண்டாவது சிவாலயமாகும். திக்குறிச்சியில் இருந்து அருமனை, களியல் வழியாக 14 கி.மீ., தூரத்தில் திற்பரப்பு மகாதேவர் கோயில் உள்ளது. அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷன் வழியாக எட்டு கி.மீ., தூரத்தில் திருந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருந்திக்கரையில் இருந்து குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷன் வழியாக ஏழு கி.மீ., தூரத்தில் பொன்மனை தீம்பலாங்குடி மகாதேவர் கோயில் உள்ளது. பொன்மனையில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில் உள்ளது. அங்கிருந்து ஆறு கி.மீ., தூரத்தில் கல்குளம் நீலகண்டசுவாமி கோயில் உள்ளது. கல்குளத்தில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் மேலாங்கோடு சிவன் கோயில் உள்ளது. அங்கிருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருவிடைக்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. திருவிடைக்கோட்டில் இருந்து ஆறு கி.மீ., தூரத்தில் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. திருவிதாங்கோடு கோயிலில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் உள்ளது. 12 சிவாலயங்களையும் பெரும்பாலான பக்தர்கள் ஓடியே தரிசிக்கின்றனர். முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் வரை உள்ள 11 கோயில்களிலும் பக்தர்களுக்குப் பரசாதமாக திருநீறு வழங்கப்படுகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் பரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது.