பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு சுவாதி பூஜை நாளை ( 2ம் தேதி )நடக்கிறது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் பிரதிசித்திபெற்ற 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு காசிபர், வருணன், சுகோசன் ஆகிய ரிசிகளுக்கு காட்சிகொடுத்த 16 திருக்கரங்களுடன் கூடிய அபூர்வ நரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். நரசிம்மர் பிறந்த சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை (2ம் தேதி ) வரும் சுவாதி நட்சத்திர பூஜையை முன்னிட்டு 16வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.