பதிவு செய்த நாள்
01
மார்
2013
11:03
பவானி: பவானி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீமாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கம்பம் நடப்படுவதற்காக, பவானி மேற்கு தெரு மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பத்தை, சீனிவாசன் என்பவர் மூலம் எடுத்து வந்து, காவிரி ஆற்று படித்துறையில் கம்பத்துக்கு பூஜை செய்யப்பட்டு, மாரியம்மன் கோவில் கம்பம் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கொத்துக்காரர் வெங்கட்ராமன், ஊர்கவுண்டர் நாகராஜ் மற்றும் மாரிமுத்து, செந்தில், மாரியப்பன், ராஜேந்திரன், நஞ்சப்பன், சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர். மார்ச், ஆறாம் தேதி புதன் கிழமை பொங்கல் விழாவின் முக்கிய நிகழச்சியான "சக்தி அழைக்கும் நிகழ்ச்சி பவானி ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் இருந்து செல்லியாண்டியம்மன் கோவிலை சென்று அடையும். தொடர்ந்து, பவானி மேற்கு தெரு மாரியம்மன், வர்ணபுரம் மாரியம்மன் கோவிலிலும் கம்பம் நடப்பட்டது. அந்தந்த பகுதியை சார்ந்த பக்தர்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.