பதிவு செய்த நாள்
01
மார்
2013
11:03
ஆழ்வார்குறிச்சி: கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 4ம் தேதி முதல் நான்கு நாட்கள் லட்சார்ச்சனை நடக்கிறது. கடையத்தில் வில்வவனநாதர் சுவாமி நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 8ம்தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 4ம்தேதி முதல் 7ம்தேதி வரை 4 நாட்கள் லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனை நாட்களில் காலை 7.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 8மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. காலை 11 மணியளவில் தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், பின்னர் மாலை 5.30 மணிக்கு லட்சார்ச்சனையும் 8மணியளவில் தீபாராதனையும் நடக்கிறது. 8ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழாவில் காலை 7.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, ஹோமம், அதனை தொடர்ந்து 10 மணியளவில் சுவாமி, அம்பாள் 308 கலச அபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6மணிக்கு சிறப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி இரவு 8மணிக்கு பள்ளியறை பூஜை, பைரவர் பூஜை ஆகியன நடக்கிறது. லட்சார்ச்சனை வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள வரும் 3ம் தேதிக்குள் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய வேண்டுமென நித்ய கல்யாணி சேவா சமாஜத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.