பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
அன்னூர்: கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவில் மகா சிவராத்திரி குண்டம் திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.கஞ்சப்பள்ளி, அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா வரும் 6ம் தேதி பரிவார தெய்வங்களின் கிராம சாந்தி பூஜையுடன் துவங்குகிறது. 8ம்தேதி காலை, மகா கணபதி ஹோமமும், மாலையில், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலும் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குண்டம் கண் திறத்தல் நடக்கிறது. மாலையில் பூக்குண்டம் போடுதல், அலங்காரம், உற்சவமூர்த்தி, நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது. அக்னி குண்டம் ஏற்றப்படுகிறது.இரவு 10.00 மணிக்கு வாணவேடிக்கை, பம்பை, உடுக்கை கொட்டு மேளத்துடன், அங்காள பரமேஸ்வரி திருவீதியுலா நடக்கிறது. வரும் 11ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பூவோடு எடுத்து குண்டம் இறங்குதல் துவங்குகிறது. அன்னைக்கு பச்சை வெண்ணையில் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம் காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீர் உற்சவம், கொடி இறக்குதல், அமாவாசை சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை குலதெய்வ சேவா மற்றும் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.