பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
பேரூர்: வேடபட்டியில், அருள்மிகு தொட்டம்மாள் ஸ்ரீவீரபத்திரசாமி திருக்கோவிலில் மகாசிவ ராத்திரி விழா, வரும் 8ம் தேதி துவங்குகிறது.பேரூர் அருகே வேடபட்டி குரும்பபாளை யத்தில் அருள்மிகு தொட்டம்மாள் ஸ்ரீவீரபத்திரசாமி கோவில் உள்ளது. பலநூறு ஆண்டு பழமைவாய்ந்த இக்கோவிலில், குரும்பா சமுதாய மக்கள்(வெள்ளிகுலம்)சார்பில் ஆண்டுதோறும், மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா, வரும் 8ம் தேதி இரவு 7.00 மணிக்கு பெரியசாமி எழுப்புதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து, மறுநாள்(9ம்தேதி) இரவு 7.00 மணிக்கு அஜ்ஜனூர் சென்று படி விளையாடுதல், 10ம் தேதி இரவு சாமி - தங்கல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 11ம் தேதி, அதிகாலை 5.00 மணிக்கு ஜலத்துக்கு செல்லுதல், மதியம் 1.00 மணிக்கு பெரியசாமி அழைப்பு, 2.00 மணிக்கு, அபிஷேகம் மற்றும் பூஜை பள்ளயம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, வரும் 12ம் தேதி காலை 10.00 மணிக்கு பெண்மக்கள் பூஜை, மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் நடத்தப்பட்டு, மாலை 6.00 மணிக்கு பெரியசாமி அனுப்புதல் நடக்கிறது. இறுதியாக, வரும் 13ம் தேதி நடக்கும் மறுபூஜையுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.