பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
மன்னார்குடி: வைணவ ஸ்தலங்களில் புகழ்பெற்றதும்,தென்திருப்பதி என்றும் அழைக்கப்படும் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.மன்னார்குடி, ராஜகோபால ஸ்வாமி கோவிலில் நடக்கும் பங்குனி பெருவிழாவில்,18 நாட்கள் பிரம்ம உற்சவமும்,12 நாட்கள் விடையாற்றி விழாவும் நடக்கிறது. பிரம்ம உற்சவத்தில் புன்னை வாகனம், ஹம்ச வாகனம், கண்டபேரண்டபட்க்ஷி, புக்ஷ்ப பல்லக்கு, ரிக்ஷியமுகபர்வதம், சிம்ம வாகனம், தங்க சூர்யபிரபை, வெள்ளி சேக்ஷ வாகனம், தங்க கருட வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், யானை வாகனங்களில் தினந்தோறும் பெருமாள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.மார்ச், 11ம் தேதி தங்க சூர்யபிரபை, 17ம் தேதி வெண்ணைத்தாழி, வெட்டுங்குதிரையும், 18ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. பங்குனி பெரு விழா துவக்க நாளன்று, சன்னதி முன் உள்ள பெரிய கொடி மரத்தில் தீட்ச்சிதர்கள் வேதங்கள் முழங்க கொடியேற்றினர். இரவு, 8 மணியளவில் பெருமாள் கல்யாண கோலத்தில் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.