உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2013 10:03
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹா சிவராத்திரி பிரமோற்சவம் நாளை (5ம் தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி நாளை இரவு 7.30 மணிக்கு சக்தி கரகம் வலம் வருதல், கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து தினசரி இரவு சாமி வீதியுலாவும், 9ம் தேதி வள்ளாராஜன் கோட்டையில் காலை 5 மணிக்கு காப்பு கட்டுதல், 10ம் தேதி மஹா சிவராத்திரியில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலுவு இருத்தல், இரவு 12 மணிக்கு மயானம் சென்று சக்தி உருவு கூட்டி அம்மனை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி மாலை 4 மணிக்கு சிங்க வாகனத்தில் அமர்ந்து மயானம் புறப்பட்டு வள்ளாராஜன் கோட்டை அழித்து குடல் கவ்வி சென்று சுடுகாட்டில் மருள் அடித்து குறி சொல்லுதல் வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து 15ம் தேதி வரை விழா நடக்கிறது. விழாவில் தமிழாசிரியர் பாலசுப்ரமணியன் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார்.