ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை துவங்குகிறது.ஈரோடு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவிலில், மாசி மாத குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்குவர்.இந்தாண்டு காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஃபிப்ரவரி, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 25ம் தேதி இரவு கொடியேற்றம் நடந்தது.காளியம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. நேற்று காலை, 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, கருங்கல்பாளையம், மணிக்கூண்டு வழியாக பால்குட ஊர்வலம் வந்தது. இதில், மாநகரின் பல பகுதியில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாளை இரவு, 7 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நடக்கிறது. 6ம் தேதி காலை, 5 மணிக்கு பூ மிதித்தல் நடக்கிறது.இரவு, 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. 7ம் தேதி மறு பூஜையோடு குண்டம் விழா நிறைவடைகிறது.