புதுச்சேரி: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு வரவிருப்பதை முன்னிட்டு, உலக நன்மைக்காக உஞ்சவிருத்தி யாத்திரை நடந்தது. டி. என். பாளையத்தில் துவங்கிய உஞ்சவிருத்தி யாத்திரையில் ராமானுஜர், பெருமாள் உருவப் படங்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த யாத்திரை மதியம் 1.30 மணியளவில் முடிந்தது. ராமானுஜர் சிறப்புகள் குறித்த உபன்யாசம் நடந்தது. இறுதியாக ராமானுஜரின் நூற்றைந்தாதி ஓதப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டி.என். பாளையப் பிரமுகர்கள், ஜீயர் சுவாமிகளின் சிஷ்யர்கள் செய்தனர்.