பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
நாமக்கல்: சிங்கிலிப்பட்டி ராஜகணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, மார்ச், 22ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் வேலகவுண்டம்பட்டி அடுத்த சிங்கிலிப்பட்டியில் ராஜகணபதி, மகா மாரியம்மன், சிலுவாண்டியம்மன், மதுரைவீரன் மற்றும் நவக்கிரக கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது.திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், மார்ச், 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, மார்ச், 18ம் தேதி இரவு, 10 மணிக்கு கிராம சாந்தியுடன் விழா நிகழ்ச்சி துவங்குகிறது. 19ம் தேதி காலை, 8.30 மணிக்கு கணபதி பூஜை, கணபதி மற்றும் நவக்கிரகம் ஹோமம், மாலை, 6 மணிக்கு மகாலட்சுமி பூஜை நடக்கிறது.மார்ச், 20ம் தேதி காலை, 7 மணிக்கு அபிஷேக பூஜை, தீபாராதனையும், காலை 9 மணிக்கு ஆற்றுக்கு செல்லுதல், கங்கா, யமுனா, சரஸ்வதி, பவானி, கூடுதுறை, ராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தம் அழைத்தல், மாலை, 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச வேலி, அங்குரார்பனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி நடக்கிறது.மார்ச், 21ம் தேதி காலை, 9.30 மணிக்கு கணபதி வழிபாடு, விசேஷ சாந்தி ஆச்சார்யார யாகசாலை பிரவேசம், காயத்ரி மந்திரம், திரவியம் மற்றும் மாலா மந்திர ஹோமம், மாலை, 4.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், ராஜகணபதி, மகா மாரியம்மன் ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.மார்ச், 22ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு புண்யாகம், நான்காம் காலயாக வேள்வி துவக்கம், நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 6 மணிக்கு கடம்புறப்பாடு, அதை தொடர்ந்து ராஜகணபதி, மகா மாரியம்மன், சிலுவாண்டியம்மன், நவக்கிரகம், மதுரை வீரன் ஆகிய கோவில்கள் மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.