மேல்மலையனூர் முடிகாணிக்கை மறு ஏலம்: ரூ.10 லட்சம் கூடுதல் வருவாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2013 10:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மறு ஏலத்தில் முடிகாணிக்கை 91 லட்சம் ரூபாய் தொகைக்கு குத்தகை விடப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா நீங்கலாக ஓராண்டிற்கு முடி சேகரிப்பதற்கான குத்தகை ஏலம் கடந்த ஜனவரி 9ம் தேதி நடந்தது. இதில் 81 லட்சம் ரூபாய் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலத்திற்கு விதிமுறைபடி விளம்பரம் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி நேற்று மறு ஏலம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் வேதா, சி. ஜோதி, எம்.ஜோதி ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.இதில் அதிகபட்சமாக 91 லட்சம் ரூபாய் ஏலத் தொகையை நிர்ணயித்த போளூரை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு முடி காணிக்கை குத்தகை விட முடிவானது. ஏலத்தின் போது, அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி, மேலாளர் முனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர். இரண்டாவது முறையாக நடந்த ஏலத்தில் 10 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் கேட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.