பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில், மஹாசிவராத்திரியுடன் தொடர்புடையது, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோவில், பாபநாசம், 108 சிவாலயம், திருவைக்காவூர் வில்வனேஸ்வரர் கோவில் ஆகிய, நான்கு கோவிலாகும். மஹா சிவராத்திரி தினத்தில், கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு கால பூஜையும் மேற்கண்ட எந்த கோவில்களில் வழிபட வேண்டும் என, ஐதீக முறைப்படி பிரித்து கூறப்பட்டுள்ளது. தஞ்சை அருகேயுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், முதல் காலத்திலும், தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோவிலில், இரண்டாம் காலத்திலும், பாபநாசம், 108 சிவாலயத்தில், மூன்றாம் காலத்திலும், திருவைக்காவூர் வில்வனேஸ்வரர் கோவிலில், நான்காம் காலத்திலும், பூஜை, வழிபாடு செய்ய வேண்டும். இதன்மூலம் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறும். மேற்கண்ட, நான்கு கோவில்களில் மஹாசிவராத்தியையொட்டி, விபூதி, பிரசாதங்களை பெற விரும்பும் பக்தர்கள், 150 ரூபாய்க்கு "டிடி எடுத்து, தங்களது முகவரியை தெளிவாக எழுதி, செயல் அலுவலர், வசிஷ்டேஸ்வரர் கோவில், திட்டை, தஞ்சை மாவட்டம் எனும் முகவரிக்கும் அனுப்பலாம் என, திட்டை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். நான்கு சிவன் கோவில்களிலும் மஹாசிவராத்தியை முன்னிட்டு வரும், பத்தாம் தேதி இரவு, நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இற்கான ஏற்பட்டை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் புகழேந்திரன் உத்தரவுப்படி, செயல் அலுவலர் கோவிந்தராஜூ, ஆய்வாளர்கள் சுரேஷ், ஹம்சன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.