பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், உலகின் மிகப்பெரிய அர்த்தநாரீஸ்வரர் சிலை திறக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஜோகன்னஸ்பர்க்கில், பெனோனி பகுதியில், 20 மீ., உயர, அர்த்தநாரீஸ்வரர் சிலையை, அங்குள்ள தமிழ் பள்ளி வாரியம் நிறுவியுள்ளது. இதுகுறித்து, பெனோனி தமிழ் பள்ளி வாரிய தலைவர் முத்துசாமி கூறியதாவது: பெரும்பாலான சமூகத்தில், பெண்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பதில்லை. ஆனால், இறைவன் ஈசன், தனது உடலின், ஒரு பகுதியை சக்திக்கு அளித்துள்ளார். பெண்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்க வேண்டும், என்பதை அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் மக்களுக்கு உணர்த்துகிறது. மொரிஷியஸ் நாட்டில் உள்ள, சிலையை பார்த்த போது, இங்கும் சிவனுக்கு சிலை அமைக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய சிற்பிகள், ஒன்பது பேரை கொண்டு, 20 மீ., உருக்கு சிலையை உருவாக்கினோம். இவ்வாறு, முத்துசாமி கூறினார்.