பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், 800 பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பல்லடம் அங்காளம்மன் கோவில் 38வது குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு விக்னேஷ்வரா பூஜையுடன் துவங்கியது. 9ம்தேதி கொடியேற்றம், யாகசாலை பூஜை, முகப்பள்ளம் மயான பூஜை நடந்தது. கடந்த 10ம் தேதி சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு, அக்னி குண்டம் வளர்த்தல், அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் மற்றும் மஹா சிவராத்திரி பூஜை நடந்தது. நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது; 800க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் குண்டம் இறங்கி, தங்களின் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். நேற்றிரவு அக்னி அபிஷேகம், பொங்கல்வைத்தல், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கொடி இறக்குதல் , மஹாஅபிஷேகம், மஞ்சள்நீராடல், அம்மன் திருவீதி உலா, பேச்சியம்மன் பூஜையுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது.