Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் 23ம் தேதி தெப்ப உற்சவம் ... மண்டைக் காட்டில் சக்கர தீவெட்டி பவனி மண்டைக் காட்டில் சக்கர தீவெட்டி பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 14-ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 மார்
2013
10:03

கோவை:கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, மார்ச் 14 துவங்குகிறது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, மார்ச் 14 காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், அனுக்ஞை, தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜைகளுடன் துவங்குகிறது.மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், 15ம் தேதி காலை 7:00 மணிக்கு, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 9:00 மணிக்கு, கலசங்கள் வைத்தல், ராஜகோபுர நுழைவாயில் நடைதிறப்பு, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவையும் நடக்கின்றன. மாலை 4:00 மணிக்கு, மூலாலயத்திலிருந்து கலசங்கள் யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடக்கிறது.16ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 17ம் தேதி, நான்காம் கால யாக பூஜையும், இரவு 10:00 மணிக்கு, அஷ்டபந்தனம் சொர்ணபந்தனம் சாற்றுதலும் நடக்கிறது.

18ம் தேதி காலை 5:00  6:00 மணிக்குள், தான்தோன்றி விநாயகர், இடும்பன், மயில்வாகனங்கள், சித்தர் மற்றும் பரிவார மகாகும்பாபிஷேகமும், 7:00 மணிக்கு மேல், கலசங்கள் யாக சாலையிலிருந்து மூலாலயத்திற்கு பிரவேசமும் நடக்கிறது. 9:30 மணிக்கு மேல், ராஜகோபுர அனைத்து கோபுரங்களுக்கும் சமகால மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.10:30 மணிக்கு மேல், மகாகணபதி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜ பெருமாள் பரிவார மூர்த்திகள், மூலவர், மருதாசலமூர்த்தி கும்பாபிஷேகம் பூஜை தீபாராதனை, மகாபிஷேகம், தசதானம், தசதரிசனம் ஆகியவை நடக்கின்றன.மாலை 5:00 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar