சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே உள்ள இரு கோவில்களை புதுபிக்க அறநிலைத்துறை சார்பில் தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அறநிலைத்துறை மூலம், சத்தியமங்கலம் தாலுகா பவானிசாகர் யூனியன் வெங்கநாய்க்கன்பாளையம் அண்ணாமலையார் கோவில் மற்றும் கோப்பம்பாளையம் திட்டபெருமாள் ஆகிய இரண்டு கோவில்கள் தற்போது இடிந்து காணப்படுகிறது. இந்த இரண்டு கோவில்களை புதுபிக்க அறநிலைத்துறை சார்பில், 2012 - 13ம் ஆண்டு நிதியில் இருந்து ஒவ்வொரு கோவிலுக்கும் தலா, 50 ஆயிரம் ரூபாய் காசோலையாக அக்கோவில் விழா கமிட்டியிடம் வழங்கப்பட்டது. இந்த காசோலைகளை சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்வம், பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கமலா செய்திருந்தார்.