முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயில் மாசிக்களரி, மூன்றாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.சுவாமி வேடமணிந்த பக்தர்களுக்கு மஞ்சள் நீர் ஊற்றும் நிகழ்ச்சி முடிந்து, ஊரின் மையப்பகுதியில், 5,000த்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் உடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடக்கும் இந்த மாசிக்களரி விழாவில், மலேசியா, சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்றனர். பின்னர் சுடலைமாடன் கோயில், கந்தசாமிபுரம் சோனை கருப்பசாமி கோயிலில் மாசிக்களரியை முன்னிட்டு பாரிவேட்டை, கிடா வெட்டு, பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது.