ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டி தெரு திரவுபதியம்மன் கோயிலில், பூக்குழி விழா நடந்தது. கடந்த பத்து நாட்களாக நடந்த விழாவில் நேற்று முன் தினம் நடந்த பூக்குழியில், பெண்கள் உட்பட ஏராளமானோர் தீ மிதித்தனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நேற்று காலை கோயிலிருந்து கிருஷ்ணன், திரவுபதி, அர்ஜூனன் ஆகியோர் புறப்பட்டு, ஆண்டாள் கோயில் வந்தடைந்தனர். அங்கு மாலை அணிவிக்க தீபாராதனை நடந்தது.