பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
கோவை: கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நாளை துவங்குகிறது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, நாளை காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், அனுக்ஞை, தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜைகளுடன் துவங்குகிறது.மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், 15ம் தேதி காலை 7:00 மணிக்கு, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 9:00 மணிக்கு, கலசங்கள் வைத்தல், ராஜகோபுர நுழைவாயில் நடைதிறப்பு, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவையும் நடக்கின்றன. மாலை 4:00 மணிக்கு, மூலாலயத்திலிருந்து கலசங்கள் யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடக்கிறது.16ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 17ம் தேதி, நான்காம் கால யாக பூஜையும், இரவு 10:00 மணிக்கு, அஷ்டபந்தனம் சொர்ணபந்தனம் சாற்றுதலும் நடக்கிறது.
18ம் தேதி காலை 5:00 - 6:00 மணிக்குள், தான்தோன்றி விநாயகர், இடும்பன், மயில்வாகனங்கள், சித்தர் மற்றும் பரிவார மகாகும்பாபிஷேகமும், 7:00 மணிக்கு மேல், கலசங்கள் யாக சாலையிலிருந்து மூலாலயத்திற்கு பிரவேசமும் நடக்கிறது. 9:30 மணிக்கு மேல், ராஜகோபுர அனைத்து கோபுரங்களுக்கும் சமகால மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.10:30 மணிக்கு மேல், மகாகணபதி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜ பெருமாள் பரிவார மூர்த்திகள், மூலவர், மருதாசலமூர்த்தி கும்பாபிஷேகம் பூஜை தீபாராதனை, மகாபிஷேகம், தசதானம், தசதரிசனம் ஆகியவை நடக்கின்றன.மாலை 5:00 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.