திருவான்மியூர்: திருவான்மியூர், மருந்தீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா வரும் சனிக்கிழமை துவங்குகிறது.வரும் 18ம் தேதி காலை 9:45 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. வரும் 20ம் தேதி அதிகார நந்தி வாகனத்தில், சூரிய பகவானுக்கு காட்சி தருதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 24ம் தேதி தேர் திருவிழாவும், 26ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாணமும், 27ம் தேதி சந்திரசேகரர் கடல் நீராடல், தியாகராஜ சுவாமி திருமண விழாவுடன் கொடியிறக்கமும் நடக்க உள்ளன.வரும், 28ம் தேதி சந்திரசேகரர் தெப்ப திருவிழாவும், வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கின்றன. பந்தம்பறி 18 திருநடன பெருஞ்சிறப்பு விழாவும் நடக்க உள்ளன.