சபரிமலை: பங்குனி மாத பூஜைகள் மற்றும் உத்திர உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நேற்று முன் தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல், கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் துவங்கின. வரும், 18ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பங்குனி உத்திர உற்சவத்திற்கான, கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ம் தேதி உத்திர உற்சவமும், தீர்த்தவாரியும் (ஆராட்டு) நடத்தப்பட்டு, அன்றிரவு, 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.