முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது தனி சிறப்பு. முருகனின் கருவறை அருகில் பவளக்கனிவாய் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இதனால் இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சன்னதியில் உள்ள உற்சவப்பெருமாளுக்கு சர்வ அலங்காரமும், அபிஷேகமும் நடைபெறும். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி என, வருடத்தில் இருமுறை பவளக்கனிவாய் பெருமாள் உலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.