கீழக்கரையில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2013 10:03
கீழக்கரை: கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது ஒலியுல்லா தர்காவில் நடந்த, கந்தூரி கொடியேற்று விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா, நேற்று முன்தினம் துவங்கியது. ஆலிம் அப்துல் சலாம் உலக மக்களின் நன்மைக்காகவும், ஒற்றுமைக்காகவும்"துஆ ஓதிய பின் கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து 14 நாட்கள் மவுலீது ஓதப்படும். மார்ச் 25ல் சந்தனம் பூசும் விழா, 26ம் தேதி அதிகாலை மகானின் சமாதியில் சந்தனம் பூசப்படும். ஏப்.,11ல் கொடி இறக்கப்பட்டு நேர்ச்சிகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி நிர்வாகிகள் மக்பூல் சுல்த்தான், ஜலால், ஹாஜா அபுபக்கர்,பாரூக் செய்து வருகின்றனர்.