பதிவு செய்த நாள்
16
மார்
2013
10:03
நரிக்குடி: நரிக்குடி அருகே வீரக்குடி அருள்மிகு முருகய்யனார் கோவில் மஹா சிவராத்திரி உற்சவ திருவிழா ஐந்து நாட்கள் நடந்தது. முதல் நாளில் கணபதி ஹோமம், ருத்ரா அபிஷேகம், சங்கா அபிஷேகம், பச்சை வாழை பரப்புதல், விஷேச அலங்கார ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்ன் வள்ளி தெய்வானை சமேத, அருள்மிகு கரைமேல் முருகன் சர்வ அலுங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளில் பொங்கல், அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. மூன்றாம் நாளில் பூச்சக்கர குடைகள் மகிட தோரணம் சுருட்டி சென்டா, மேள தாளத்துடன் கரகமாடி முருகன் ஆலயம் சென்று சர்வ அலுங்காரத்துடன் அருள்மிகு வீரத்தெடல் சென்று பால் பொங்கல் வைத்தல், கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாளில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஐந்தாம் நாளில் சிறப்பு அபிஷேகம் செய்து உற்சவருக்கு தீர்த்தவாரி நடந்தது. பிந்நர் விஷேச அபிஷேக நல்வழி ஆராதனைகள் நடந்தது. ஏராள பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றுச் சென்றனர்.