விநாயகப்பெருமானை முதற்கடவுள் மட்டுமல்ல. இவர் போர்க்கடவுளாகவும் விளங்கினார் என்பதற்கு இவருக்குரிய கணபதி என்ற பெயர் ஆதாரமாக விளங்குகிறது. சிவபெருமானின் படையான கணங்களின் தலைவராக இவர் திகழ்ந்ததால் கணபதி என பெயரிட்டனர். இவர் தன் தந்தத்தால், கஜாமுகாசுரனை அழித்ததாக திருச்செங்காட்டங்குடி தலபுராணம் கூறுகிறது. விநாயகர் சேனைகளின் தலைவராக விளங்கியதை, மகா கணபதி நவார்ண வேதபாதஸ்தவ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லியுள்ளனர். திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயில் தூண் ஒன்றில், விநாயகர் போர்வீரனைப் போல ஆயுதம் ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார்.