பதிவு செய்த நாள்
19
மார்
2013
11:03
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 50 ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.செங்கல்பட்டு ராஜாஜி தெருவில், புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதிலமடைந்திருந்ததால், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் வழக்கமாக நடைபெறும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்பணி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தது.அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 50 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்றுமுன்தினம் காலை கொடியேற்றத்துடன், கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. வரும் 21ம் தேதி அதிகார நந்தி, 22ம் தேதி அறுபத்துமூவர் உற்சவம், 23ம் தேதி தேர் உற்சவம், 26ம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை ”வாமி வீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.