பதிவு செய்த நாள்
19
மார்
2013
11:03
சேலம்: சேலம், வின்சென்ட் எல்லை பிடாரியம்மன் கோவிலில், இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.சேலம், குமாரசாமிபட்டி, வின்சென்ட் அருகில் எல்லை பிடாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் அம்மனுக்கு இன்று இரவு, 7 மணிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. 26ம் தேதி இரவு, 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு நடக்கிறது. 27ம் தேதி அதிகாலை, 6 மணிக்கு அலகு குத்துதல், 28ம் தேதி காலை, 8.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மாலை, 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 29ம் தேதி காலை, 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. 30ம் தேதி பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் சத்தாபரணம் திருவீதி உலா நடக்கிறது. 31ம் தேதி காலை, 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.