பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
செங்கல்பட்டு: பொன்விளைந்தகளத்தூரில் உள்ள, மீனாட்சி அம்பாள் சமேத முன்குடுமீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, இன்று இரவு புஷ்ப நாக வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூரில், மீனாட்சி அம்பாள் சமேத முன்குடுமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த, 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று, முதல் தினமும் காலை 8:00 மணிக்கு அபிஷேக, ஆராதனை, இரவு 7:00 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இன்று, இரவு புஷ்ப நாக வாகனம், 21ம் தேதி ரிஷப வாகனம், 22ம் தேதி யானை வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது. பிரபல உற்சவமான ரதோற்சவம், 23ம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெறும். மறுநாள் இரவு சந்திரபிரபை, 25ம் தேதி இரவு தொட்டில் உற்சவம் நடைபெறும். பங்குனி உத்திரமான 26ம் தேதி காலை தீர்த்தவாரி நடைபெறும்.மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் பங்குனி உத்திர திருக்கல்யாணம், 6:00 மணிக்கு விளக்கு பூஜை, ஏழு மணிக்கு சுவாமி புறப்பாடு, இரவு 12:00 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.