கோதண்டராம ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்: மார்ச் 29ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2013 10:03
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமசாமி கோவில் கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, தில்லைவிளாகம் வீரகோதண்டராமசாமி கோவில் மிகவும் தொன்மையானது. இதன் திருப்பணிகள் நடந்து, நிறைவு பெற்ற நிலையில், யாக சாலை பூஜைகள் ஏற்பாடு நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி மாலை அனைத்து விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கி, 29ம் தேதி காலை 8 மணிக்கு நிறைவடைந்து, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து மஹாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ""கீழையூர் சவும்ய நாராயணா பட்டாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர் கோதண்டராமர் குழுவினர் சிறப்பு யாக சாலை வழிபாடுகளை நடத்துகின்றனர், என, ராம கைங்கரிய சபா தலைவர் சக்கரவர்த்தி பட்டாச்சாரியார், பரம்பரை அறங்காவலர் சேகர் ஆகியோர் கூறினர்.