பதிவு செய்த நாள்
22
மார்
2013
10:03
சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருத்தணிக்கு காவடி மற்றும் பாதயாத்திரை, நாளை காலை 4:00 மணி அளவில் புறப்படுகிறது. நகரத்தார் திருத்தணி பாதயாத்திரை குழு டிரஸ்ட், 30-ம் ஆண்டாக, இந்த பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை பவளக்காரத் தெருவில் உள்ள, புது தெண்டாயுதபாணி கோவில் வீட்டிலிருந்து இன்று மாலை 6:00 மணிக்கு காவடி கட்டி, 8:00 மணிக்கு அரோகரா செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 4:00 மணிக்கு பவளக்கார தெருவில் இருந்து புறப்பட்டு, பகலில் அம்பத்தூர் டி.ஐ., சைக்கிள் நிறுவனத்தில் தங்கி, மாலை 4:00 மணிக்கு அம்பத்தூரில் இருந்து புறப்பட்டு இரவு ஆவடியில் தங்குதல். தொடர்ந்து, 24ம் தேதி காலை 6:00 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு, பகலில் வேப்பம்பட்டில் தங்கி, மாலை 5:00 மணிக்கு திருவள்ளூர் புறப்பட்டு இரவு அங்கு தங்குதல். மறுநாள் 25ம் தேதி காலை 4:00 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு, பட்டரை பெரும்புதூரில் பானக பூஜை முடித்து, திருவாலங்காட்டில் பகலில் தங்கி, அங்கிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, ஸ்டீல்
பிளான்டில் இரவு தங்குதல்: 26 ம் தேதி காலை 5:30 மணிக்கு ஸ்டீல் பிளான்டில் இருந்து புறப்பட்டு, பகலில் சரஸ்வதி நகரில் தங்கி, மாலை 6:00 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்தல்., 27ம் தேதி காலை 9:00 மணி அளவில் திருத்தணி மலை கோவிலுக்கு காவடி முத்திரைகளுடன், பால்குடங்கள் புறப்பட்டு மலைக்கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்தல். இரவு தங்கரத புறப்பாடு. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி நகரத்தார் பாதயாத்திரை குழு டிரஸ்டை சேர்ந்த நகரத்தார்கள் செய்துள்ளனர்.