திருப்பூர்: பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது; கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் 26ல் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, இரவு 8.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, 10.00 மணிக்கு பெருமாள் கோவில் வீதியில் கிராமசாந்தி நிகழ்ச்சி நடந்தது. நாகராஜ், சம்பத் குருக்கள் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அஷ்ட திக்பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (22ம் தேதி) காலை 7.30 மணிக்கு அம்மன் வீதி உலா வருதல், இரவு 7.00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.