பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்காக, பால்குடம், காவடியுடன் ஏராளமான பக்தர்கள் மலைகோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து, மலைக்கோயிலில் நாளை (மார்ச் 24) முதல் 5 நாட்கள் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. விழாவையொட்டி, அடிவாரம் குடமுழுக்கு அரங்கில், தினமும் மாலையில், மங்கள இன்னிசை, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.