பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனித் ஐந்தாம் நாள் திருவிழாவாக கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டன் எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள, பக்தர்கள் உள்ளங் கைகளில் தலைக்குமேல் வானகத்தை தூக்கி சென்றனர்.கோயிலில் மார்ச் 17ல் இத்திருவிழா துவங்கியது. நேற்றிரவு யானை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, தெய்வானையை, சீர்பாதங்கள், கிராமத்தினர் உள்ளங்கைகளில் தலைக்குமேல் தூக்கிக் கொண்டு கொத்தாளமுக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர். பின், பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக, மார்ச் 26ல் பங்குனி உத்திரம், மார்ச் 27ல் சூரசம்ஹாரம், மார்ச் 28ல் பச்சைக்குதிரை ஓட்டம், இரவு பட்டாபிசேஷகம், மார்ச் 29ல் திருக்கல்யாணம், மார்ச் 30ல் தேரோட்டம், மார்ச் 31ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.