குல தெய்வத்தை மறக்கலாமா திருச்சி கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2013 10:03
மதுரை: குல தெய்வத்தை மறக்க கூடாது, என, மதுரை ஆண்டாள்புரத்தில், பாரதி யுவ கேந்திரா சார்பில் நடக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருச்சி கல்யாணராமன் குறிப்பிட்டார்.அவர் பேசியதாவது: ஒரு மொழியை வளர்க்க விரும்புபவர், மற்றொரு மொழிக்கு விரோதமாக செயல்படக் கூடாது. குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்லுதல் வேண்டும். ஒருவரை நாம் சரியாக புரிந்து, தெரிந்து கொள்ளாமல் அவரை நாம் குற்றம், குறை கூற கூடாது. அழகு என்பது ஆபத்து. உலகில் கடவுளுக்காகவும், பக்தர்களுக்காவும், பக்தியை வளர்ப்பதற்காகவும் எத்தனை சிரமங்கள் வந்தாலும், ஏற்று கொள்ள வேண்டும். கோபப்பட வேண்டும். ஆனால், கோபத்தை அடக்கும் சக்தி இருக்க வேண்டும். சகோதர, சகோதரிக்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். பகவான் நாமாவை நாம் எங்கு சொல்ல கூப்பிட்டாலும், தயங்காமல், சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பு உணர்ந்து செயல்பட வேண்டும், என்றார்.