பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
இந்த இயந்திர உலகில் எந்த ஒரு செயலையும் பிரதிபலன் பார்க்காமல் செய்வது கடினம். அதிலும் இறைவழிபாட்டு செயலான ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணத்தை 750 வாரங்களாக சனிக்கிழமை தோறும் மாலை 6 மணியளவில், தொடர்ந்து நடத்துவது என்பது ஒரு இமாலய சாதனை ஆகும். அமைதியாக நடந்து கொண்டிருக்கும் இந்த பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலன் பெற விரும்புவர்கள் தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஜெய்ஹிந்த்புரம் கிளை, இராமையா 6வது குறுக்குத் தெரு, மதுரை – 625 011. மொபைல் +91 98949 88005 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாரம் 750வது வாரம் என்பதால் இன்று மாலை 5.15 மணிக்கே பாராயணம் ஆரம்பமாகி விடும்.
விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயண பலன்: இந்த கலியுகத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவி எங்கும் நீக்கமற நிறைந்து அருளும் பகவானை துதிக்க பல ஸ்தோத்திரங்களும், பாடல்களும் நம்மிடையே உள்ளன. அதில் பரம ஞானியான பீஷ்மாச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன்னிலையில் நமக்கு அளித்த ஆயிரம் நாமமே ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம். இதற்கு ஆதி சங்கரர் முதன் முதலில்; அம்பிகையின் அருளால் ஸ்ரீ பாஷ்யம் அருளினார். அப்படிப்பட்ட பலவித மகான்கள் முன்னோர்கள் துதித்த மிகப் புண்ணியம் தரக்கூடிய ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாமத்தை இன்றும் இவ்வுலகம் உய்வதற்கும், லோகம் இன்புறுவதற்கும், சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட உன்னதமான, பவித்ரமான ஸகஸ்ர நாமத்தை, சொல்லுவதால் வாழ்கையில் சுபிட்ஷம், மகாலெட்சுமியின் அருட்கடாஷம் கிடைக்கும். நோயுற்ற உடல் குணமாகும். இன்றும் வேதம் கற்றுக்கொள்ளும் வித்தியார்த்திகள் தினமும் காலையும் மாலையும் சொல்லுவது இச்சுலோகமே. இச்சுலோகத்தை இல்லத்தில் காலை மற்றும் மாலையில் இரண்டு வேலை பாராயணம் செய்தால் மகாலெட்சுமினுடைய கிருபை பரிபூர்ணமாக கிடைக்கும். இப்படிப்பட்ட இச்சுலேகத்தை பார்வதி தேவி தினமும் பாராயணம் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன. அத்தேவி ஒருநாள் காலையில் இச்சுலோகம் சொல்ல கிளம்பும் போது ஈசன் படி அளக்க அம்பிகையை அழைக்கிறார். அப்பொழுது தேவி நான் பாராயணம் செய்யவேண்டும் என்று கேட்க, அதற்கு ஈசன் மூன்று முறை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் கூறிய பலன் கிடைக்க கூடிய பின்வரும் ஸ்லோகத்தை சொல்கிறார்.
“ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே”
இதைச் சொன்னால் ஸகஸ்ர நாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்று ஈசனே நமக்கு அருளியிருக்கிறார். இப்படிப்பட்ட பவித்ரமான ஸ்லோகத்தை, நாமும் துதித்து வாழ்கையிலே மேன்மை பெற்று இன்புறுவோம்.