பதிவு செய்த நாள்
25
மார்
2013
10:03
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 28 அடியாகக் குறைந்ததால், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, தற்போது முழுமையாகத்தெரிகிறது.மேட்டூர் அணை, 151 சதுர கி.மீ., நீர்பரப்பு கொண்டது. அணை கட்டும் முன், நீர்பரப்பு பகுதியில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. மேட்டூர் அடுத்த பண்ணவாடி அருகே, ஒரு கிராமத்தில், ஜலகண்டேஸ்வரர் கோவிலும், அங்கிருந்து இரண்டு கி.மீ., தூரத்தில், மற்றொரு கிராமத்தில், கிறிஸ்தவ தேவாலயமும் இருந்தன.அணை கட்டுமானப் பணி துவங்கியதும், நீர்தேக்க பகுதியில் இருந்த மக்கள், கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஜலகண்டேஸ்வரர் கோவில் எதிர்புறம் இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயம் மட்டும் அப்படியே இருந்தன.தற்போது, அணையின் நீர்மட்டம், 28 அடியாகக் குறைந்துள்ளதால், நந்தி சிலை அடி பீடம் வரை, முழுமையாகத் தெரிகிறது.