காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2013 10:03
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் பஞ்சமூர்த்திகள் யாக பூஜைகளுடன் மடவிளாக புறப்பாடு, பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடந்தது. 19ம் தேதி கயிலாச நாதர் பூத வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் பெரிய வீதி புறப்பாடும் நடந்தது. 20ம் தேதி யானை வாகனத்திலும், 21ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் கைலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது, சாகம்பரி அம்பாள் திருக்கயிலையிலிருந்து வந்து சாமியை பூஜிக்கும் நிகழ்ச்சியும், அதைதொடர்ந்து. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகள் முடிந்து பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை கைலா சநாதர் பரதேசி கோலம் போதல், திருக்கல்யாண உற்சவம், கைலாசநாதர் சுவாமி அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 7.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.