பதிவு செய்த நாள்
25
மார்
2013
10:03
சென்னை: அறுபத்து மூவர் விழாவிற்கு வழங்கப்படும், அன்னதானத்தில் ஏற்படும் குப்பையை உடனுக்கு உடன் அகற்ற, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், இன்று, அறுபத்து மூவர் திருவிழா நடக்கிறது. இதில், நடக்கும் அன்னதானத்திற்கு பிறகு பிளாஸ்டிக் கப்புகள், அட்டைகள், பைகள், உணவு கழிவு ஆகியவை, ஆங்காங்கே குவிந்து விடுகின்றன. இந்த குப்பையை, உடனுக்கு உடன் அகற்ற, 75க்கும் மேற்பட்ட, துப்புரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே, குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பக்தர்களும் அன்னதானத்தில் சாப்பிட்டு முடித்த பின், தொன்னை, அட்டை தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகளை, குப்பை தொட்டிகளில் போட்டு, எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும், என்றார்.