பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
அச்சிறுப்பாக்கம்:நடுபழனி சித்தி விநாயகர், மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 36வது படி விழா மற்றும் 47ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா, இன்று நடைபெற உள்ளது. அச்சிறுப்பாக்கம் அடுத்த நடுபழனி என, அழைக்கப்படும், பெருங்கருணை கனக மலை அடிவாரத்தில், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் 36வது படி விழா மற்றும் 47ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா, இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மைசூரு ஸ்ரீதத்த பீடாதிபதி, கணபதி சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில், சுவாமி ஸ்ரீமானஸ தத்தா, ஸ்ரீவம்சி கிருஷ்ண கணபாடி முன்னிலையில், அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகமும், 8:30 மணிக்கு காவடி பூஜையும் நடைபெற உள்ளது. ஸ்ரீதத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள் இவ்விழாவை துவக்கி வைக்கிறார். விழாவையொட்டி, அன்னதானம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு பட்டிமன்றமும், இரவு 9:00 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.