திருப்புவனம்:திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா, மார்ச் 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. புஷ்பவனேஸ்வரர் பிரியாவிடை, சவுந்திரநாயகி சிறப்பு அலங்காரத்தில், அய்யா தேர், அம்மா தேர் என தனித்தனி தேர்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரு தேர்களும் 1 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பெண் பக்தர்கள் தேர் தடத்தில் விழுந்து வழிபட்டனர்.பேரூராட்சிக்குப்பட்ட தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, தேரோட்டம் நடப்பது வழக்கம். நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில் தேரோட்டம் நடந்ததால், நிழற்குடை சுவரில் 10.40 மணிக்கு உரசி நின்றது. சுமார் ஒரு மணி நேர இடைவெளிக்குப்பின் 11.40 க்கு மீண்டும் தேரோட்டம் துவங்கியது.