வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு, சென்னை, மதுரை நண்பர்கள் குழுவினர் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.சதுகிரி மலை செல்லும் பக்தர்கள் மலை உச்சியில் கோயிலை அடைவதற்குள், உடல்சோர்வால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். சிலர் பாதி வழியிலேயே திரும்புகின்றனர். பக்தர்களின் சோர்வை போக்கி பல்வேறு நோய்களை தடுத்திடவும், அவர்களின் உடல் சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் சென்னை, மதுரையை சேர்ந்த நண்பர்கள் குழுவினர் , நிலவேம்பு கஷாயம் வழங்கினர். சதுரகிரிமகாநடராஜன் தலைமை வகித்தார். டாக்டர் அருண்குமார் துவக்கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கஷாயம் வழங்கப்பட்டது.