கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.காலை 5.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து, மதியம் 12 மணிக்கு நிலை வந்தடைந்தது. ஜெயராம் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜை, மாலையில் சுவாமி தேரிலிருந்து புறப்பாடு நடந்தது.இன்று(மார்ச் 28) சேதுக்கரையில், தீர்த்தவாரி வழங்குதலுடன் விழா நிறைவு பெறும். ஊராட்சி தலைவர்கள் முனியசாமி (திருப்புல்லாணி), புல்லாணி (தாதனேந்தல்), செயல் அலுவலர் சுவாமிநாதன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேஷ்கார் கண்ணன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்தனர்.