கார்த்திகை பூர்ணிமா; வட மாநிலங்களில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்.. புனிதநீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2025 12:11
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் துவங்கியது. இன்று கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கையிலோ அல்லது வேறு புனித நதியிலோ நீராடி வழிபடுவது மரபு. அதன்படி இன்று ராஜஸ்தான், அஜ்மீர், புஷ்கர் நகரின் 52 படித்துறைகளில் பக்தர்கள் புஷ்கர் ஏரியில் புனித நீராடி வழிபட்டனர். வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அலைமோதினர். அயோத்தி, ஹனுமன்கர்ஹி கோயிலில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு பிரார்த்தனை செய்ய பக்தர்கள் அதிக அளவில் கூடினர். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின்படி, கார்த்திகை பூர்ணிமா மற்றும் கர் கங்கா மேளா நீராடலை முன்னிட்டு, ஹாபூர் மாவட்ட நிர்வாகம் கங்கை நதிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட கங்கா மேளாவிற்கு வந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
ஒடிசாவில் நடைபெற்ற கார்த்திகை பூர்ணிமா விழாவில் பக்தர் கூறுகையில், "இன்று கார்த்திகை பூர்ணிமா, ஒரு புனிதமான நாள். இது ஒடியாவில் போயிட் என்று அழைக்கப்படுகிறது. பூரியில் உள்ள நரேந்திர போகாரி பலருக்கு மிகவும் பிடித்த இடமாகும், இன்று, அனைவரும் காலையில் பூஜை செய்கிறார்கள், இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.