பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
ஓசூர்: உத்தனப்பள்ளி அடுத்த அஹரத்தில் பொம்மைய்யா ஸ்வாமி, லக்கும்மா தேவி கோவில் பதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை, 18 சுற்றுவட்டார கிராம மக்கள் சேர்ந்து கட்டினர். இதன் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 27ம் தேதி விழா துவங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்கார தீபராதனைகள் நடந்தது. நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் தெளிந்து பொம்மைய்யா ஸ்வாமி, லக்கும்மா தேவி சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்தனர். பெண்கள், பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. பக்தர்கள், முடிகாணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று மாலை பெண்களுக்கு மஞ்சள், சந்தனம் வழங்கி மாங்கலிய பூஜை நடந்தது. இரவு பல்லக்கு உற்சவம், நையாண்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. உத்தனப்பள்ளி, அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.