கீழக்கரை: கீழக்கரை செய்யது முகம்மது ஒலியுல்லா தர்காவில் மார்ச் 13ல் கந்தூரி விழா துவங்கியது. காட்டுப்பள்ளி வாசலில் இருந்து வெள்ளிக் குடத்தில் கரைத்த சந்தனத்தை ஊர்வலமாக எடுத்து வந்து,சமாதியில் பூசினர். தர்கா நிர்வாகி சதக்கத்துல்லா தலைமை வகித்தார். அரசு மாவட்ட டவுன் காஜி சலாஹூத்தீன், அப்துல் சலாம்,பீர் முகம்மது, முத்து சித்திக் உட்பட அனைத்து சமூகத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். ஏப்ரல் 11ல் கொடியிறக்கதுடன் கந்தூரி விழா நிறைவடைகிறது.