பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
11:04
தென்காசி: குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலில் வரும் 16ம்தேதி சித்திரை பவுர்ணமி திருவிழா துவங்குகிறது. திருக்கயிலாயத்திற்கு இணையான பொதிகை மலையில் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் செண்பகாதேவியம்மன் கோயிலில் இவ்வுலக உயிர்கள் அனைத்தும் வளம் காண ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில் சித்திரை பவுர்ணமி திருவிழா வரும் 16ம்தேதி துவங்கி 25ம்தேதி வரை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு, பகல் 12மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலை 6மணிக்கு சிறப்ப வழிபாடு, மண்டகபடிதாரர் பூஜையும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. 25ம்தேதி 10ம் திருநாளை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, இரவு 8மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 9மணிக்கு வில்லிசை இரவு 12மணிக்கு சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடுகளும், 26ம்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.